ஸ்ருதிஹாசன் பிரச்னையை சுமூகமாக தீர்க்கும் முரளிமோகன்

Bookmark and Share

ஸ்ருதிஹாசன் பிரச்னையை சுமூகமாக தீர்க்கும் முரளிமோகன்

உலக நாயகன் நடிகர் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெலுங்கு மற்றும் தமிழில்  நடிகர் நாகார்ஜுனா மற்றும்  நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகியதால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நீதிமன்றம் சென்றதாகவும், ஸ்ருதிஹாசன் மறு உத்தரவு வரும்வரை எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட கூடாது என நீதிமன்றம் உத்தரவு இட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இந்த தகவலை ஸ்ருதிஹாசன் தரப்பு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் விலகியதால் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர முயற்சிகள் செய்து கொண்டிருப்பதாகவும்,  ஆனால் இதுவரை எவ்வித வழக்கும் நீதிமன்றத்தில் பதிவாகவில்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தெலுங்கு நடிகர் சங்க தலைவருமான நடிகர் முரளிமோகன் நடிகை ஸ்ருதிஹாசன் கேட்டுக் கொண்டதால் இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க  'பிக்சர் ஹவுஸ் மீடியா' நிறுவனத்துடன் பேசி வருவதாக தெரிகிறது.


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions