கிசுகிசுக்களை கண்டு கொள்வதில்லை: சுருதிஹாசன் பேட்டி

Bookmark and Share

கிசுகிசுக்களை கண்டு கொள்வதில்லை: சுருதிஹாசன் பேட்டி

சுருதிஹாசன் மீண்டும் படப்பிடிப்பில் ‘பிசி’யாகி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது....

“நான் இப்போது படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். என் தந்தை, தங்கை, நண்பர்களை பார்க்க மட்டும் தான் நேரம் இருக்கிறது. மற்றவர்களைப்பார்க்க நேரம் இல்லை.

என் தந்தை கமல் தான் இந்த உலகில் எனக்கு மிகவும் முக்கியமானவர். அவருக்கு முக்கியமானவர்களையும் நான் மதிக்கிறேன். சினிமாவுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். அவருக்கு ‘செவாலியே’ சிவாஜி விருது கிடைத்தது பற்றி வெளி உலகத்துக்கு தெரிவிப்பதற்கு முன்னதாகவே எனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்தார். 

அவர் எனக்கு அனுப்பி செய்தியில், ‘எனக்கு செவாலியே விருது கிடைத்திருக்கிறது. இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. அதற்கு முன்பு உனக்கு தெரிவிக்க விரும்பினேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அவருக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

கிசுகிசுக்கனை நான் கண்டு கொள்வதே இல்லை. என்னைப்பற்றி என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்பதை வலைத்தளங்கள் மூலம் அறிகிறேன். யாரோ நேரம் செலவிட்டு என்னைப்பற்றி செய்தி எழுதுகிறார்கள் என்றால் நான் எதையும் சரியாக செய்கிறேன் என்று தான் அர்த்தம்” என்றார்.


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions