பொய் சாட்சி சொல்ல ஆள் செட் பண்ணிய ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

பொய் சாட்சி சொல்ல ஆள் செட் பண்ணிய ஸ்ருதிஹாசன்!

தமிழில் அறிமுகமான ஏழாம் அறிவு படத்திலேயே ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்தவர் ஸ்ருதிஹாசன். அதன்பிறகு நடித்த 3, பூஜை படங்களில் அழுத்தமான வேடங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், தற்போது விஜய்யின் புலி படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு புதுமையான கதாபாத்திரமாம்.

அதனால் அழுத்தமான பர்பார்மென்ஸ் கொடுத்து அசத்தியிருக்கிறாராம். அதையடுத்து, தற்போது அஜித்தின் 56வது படத்திலும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அஜித்தின் காதலியாக நடிக்கும் அவர், அஜித்துக்கு தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனனுக்கு சில உதவிகளை செய்வது போலவும் நடித்திருக்கிறார்.

அதில் ஒரு காட்சியில், கதைப்படி வழக்கறிஞராக நடிக்கும் லட்சுமிமேனன் எடுத்துக்கொள்ளும் ஒரு வழக்கில் ஜெயிப்பதற்காக பொய் சாட்சி ரெடி பண்ணிக்கொடுப்பாராம் ஸ்ருதிஹாசன்.

ஆனால், அந்த நபரோ இவர் கொடுத்த பணத்தைக்கொண்டு சரக்கு அடித்து விட்டு கோர்ட்டுக்கு வருபவர் சாட்சி சொல்வதற்கு முன்பே மட்டையாகி விடுவாராம். இந்த காட்சியை காமெடியாக படமாக்கியிருக்கிறார் டைரக்டர் சிவா.

 


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions