வேதாளத்துக்காக தனியாக பாடிய ஸ்ருதி

Bookmark and Share

வேதாளத்துக்காக தனியாக பாடிய ஸ்ருதி

ஸ்ருதிஹாசனும், அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ‘3’ படத்தில் இருந்து இவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. அனிருத் இசையில், ‘3’ படத்தில் ‘கண்ணழகா’ என்ற பாடலையும், ‘மான் கராத்தே’ படத்தில் ‘உன் விழிகளில்’ ஆகிய பாடல்களை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அனிருத் இசையில் ஸ்ருதி ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசன் மட்டுமே தனியாக இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘வேதாளம்’ படத்தில் அஜித் நாயகனாக நடித்து வருகிறார். ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித், கார் டிரைவராகவும், டானாகவும் நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன் வக்கீலாக நடித்து வருகிறார். மேலும், லட்சுமிமேனன், அஸ்வின் கக்குமனு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தின் ஆடியோவை அனிருத் பிறந்தநாளான அக்டோபர் 16-ந் தேதி வெளியிடவுள்ளனர். அதைத் தொடர்ந்து, தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


Post your comment





Related News
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions