ரசிகர்களுக்கு ஸ்ருதி வைத்த போட்டி

Bookmark and Share

ரசிகர்களுக்கு ஸ்ருதி வைத்த போட்டி

ரசிகர்களுக்கு இடையே போட்டி மனப்பான்மை என்பது மற்றவர்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்ற பாலிசி கொண்டிருப்பவர் ஸ்ருதி ஹாசன். இவருக்கு இன்று பிறந்த நாள்.

இதையொட்டி ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைத்திருக்கிறார். இதுபற்றி ஸ்ருதி கூறியது:ஆன்லைனில் எனக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்களுக்காக ஒரு சிறு போட்டி. பரிசு என்பது தேவையான ஒருவருக்கு கொடுத்து மகிழ்வது என்று கருதுகிறேன்.

என் பிறந்த நாள் பரிசாக நான் ரசிகர்களிடம் கேட்பது என்னவென்றால், சமீபத்தில் பிறருடைய தேவைக்காக நீங்கள் உதவி செய்திருக்கிறீர்களா? அப்படி செய்திருந்தால் அதை ஆன்லைன் மூலம் எனக்கு தெரிவியுங்கள் அல்லது யாருக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை தெரிவியுங்கள்.

இதுதான் பயனுள்ள பரிசாக இருக்கும்'  என குறிப்பிட்டிருக்கிறார்.மற்றவருக்கு உதவியதை படத்துடன் தனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறார் ஸ்ருதி. அப்படி வரும் தகவல்களிலிருந்து 5 சிறந்த ரசிகர்களை தேர்வு செய்து தனது ஆட்டோகிராபுடன் கூடிய பரிசை அவர்களுக்கு தர உள்ளாராம். 


Post your comment





Related News
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions