நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்

Bookmark and Share

நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் தன்னார்வலர்களை சேர்த்துக் கொண்டு உதவி வருகிறார்கள். அவர்கள் பூமிகா அறக்கட்டளையுடனும் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.

சென்னையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட சித்தார்த் அடுத்ததாக கடலூருக்கு சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி அவர்களின் செல்லப்பிள்ளையாக ஆகிவிட்டார். வெள்ளம் வடிந்து சென்னையில் இயல்வு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சித்தார்த் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கடலூர் மக்களுக்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. மோசமான காலம் முடிந்துவிட்டது. இனி அடுத்தபடியாக முக்கியமாக செய்ய வேண்டியது புனர்வாழ்வுப் பணிகள் தான். புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள அதில் சிறந்து விளங்கும் என்.ஜி.ஓ.க்களுடன் கைகோர்க்க வேண்டி உள்ளது.

சென்னையில் புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள பூமிகா அறக்கட்டளையுடனும், கடலூரில் அப்பணிகளை செய்ய எய்ட் இந்தியாவுடனும் சேர்ந்து பணியாற்றுகிறோம். இது குறித்து விரிவான திட்டத்தை உங்களுக்கு விரைவில் தெரிவிக்கிறோம்.

நாங்கள் கேட்டதின்பேரில் நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தியாவில் இருப்பவர்கள் மேலும் நன்கொடை அளிக்க விரும்பினால், இந்த கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

வங்கி கணக்கு எண்: 533102010503421, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, வடபழனி கிளை, சென்னை ஐஎப்எஸ்சி கோடு- யுபிஐஎன்0553310 

பூமிகா டிரஸ்ட் வங்கி கணக்கு எண்: 006010100611060 ஆக்சிஸ் வங்கி, ஆர்.கே. சாலை, சென்னை ஐஎப்எஸ்சி கோடு_ யுடிஐபி0000006 ஸ்விப்ட் கோடு- AXISINBB006 வெளிநாடுகளில் இருந்து நன்கொடை அளிப்போர் அது குறித்த விபரங்களை email protected  என்ற இமெயில் முகவரிக்கு #ChennaiMicro என்று குறிப்பிட்டு மெயில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Post your comment

Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions