பொறியில சிக்கிடாதீங்கப்பா...! - ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்

Bookmark and Share

பொறியில சிக்கிடாதீங்கப்பா...! - ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்

என்னை அறிந்தால் பட விஷயத்தில் ரசிகர்களுக்குள் சிலர் தேவையில்லாமல் பிரச்சினை உண்டாக்கப் பார்க்கிறார்கள். பொறியில் சிக்கிவிடாதீர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் 'என்னை அறிந்தால்' படம் ரிலீஸ் ஆனது. படத்திற்கு பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில் நேற்று அஜித் ரசிகரான சிம்பு படத்தை பார்த்து விட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

'ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல தமிழ் படம். சில மெண்டல்களைத் தவிர்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் படத்தை விரும்புவர்' என ட்வீட் செய்ய பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் படம் பிடிக்காத அல்லது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். சிலர் 'எனக்கு படம் பிடிக்கவில்லை... அதற்காக நான் மெண்டலா' எனக் கேட்டு வருகின்றனர்.

இந்த எதிர்ப்பு அதிகரித்து வருவதைக் கண்ட சிம்பு, இப்போது தனது பதிலை பதிவு செய்துள்ளார். அதில் 'சிலர் தேவையில்லாமல் ரசிகர்களுக்குள் பிரச்னை உண்டாக்குகின்றனர். ரசிகர்கள் புரிந்துகொண்டு செயல்படுங்கள். சிலரது பொறியில் தேவையில்லாமல் சிக்க வேண்டாம்,' எனக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions