பீப் பாடல் சர்ச்சை நடிகர் சிம்புவுக்கு சிவசேனா ஆதரவு!

Bookmark and Share

பீப் பாடல் சர்ச்சை நடிகர் சிம்புவுக்கு சிவசேனா ஆதரவு!

நடிகர் சிம்புவின் பீப் பாடலுக்கு, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், இதனை தெரிவித்தார்.  

நடிகர் சங்கத்தேர்தலில் நாசருக்கு எதிராக செயல்பட்டதாலேயே தற்போது சிம்புவிற்கு எதிராக நாசர் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சிம்புவின் பாடல் வெளியிடப்படாத பாடல் என்றும் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவதன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்ந்து நடிகர் சிம்புவிற்கு எதிராக போராட்டம் நடத்தினால் சிவசேனா அமைப்பு சார்பில் நடிகர் சிம்புவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சிவசேனா, இந்துமக்கள் கட்சி, இந்துமகா சபா, இந்து அதிரடிப்படை அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார். 

மேலும், நடிகர் கமல்ஹாசனை கடுமையாக தாக்கி அவர் பேசினார்.


Post your comment





Related News
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
சிம்பு ஜோடி குறித்து திடீரென பரவிய வதந்தி – பதறிப்போய் அவரே சொன்னத பாருங்க!
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்?
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions