எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!

Bookmark and Share

எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!

இது நாள் வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், 

“சிம்பு ஒரு அபாரமான நடிகர்.. அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது. இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார்.

அதன்படி அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு அதைதொடர்ந்து கன்னடத்தில் வெற்றிபெற்ற முஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தில் இவருடன் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

இதுபோக புதிய படமொன்றிலும் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். சங்கிலி புங்கிலி கதவத் திற படத்தின் இயக்குனர் ஐக் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். 

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் இப்படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் ஆகவும் சிம்பு எம்.ஆர்.ராதாவாகவும் நடிக்கிறார்கள். மேலும் நடிகை ராதிகா இப்படத்தை தயாரிக்கிறார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

 


Post your comment





Related News
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions