ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ்?

Bookmark and Share

ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ்?

ஜி.வி.பிரகாஷ் நடித்த “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தை இயக்கிய ஆதிக்ரவிச்சந்திரன், சிம்புவுக்கு ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்ததால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டிருந்தார் என்று சொல்லப்பட்டது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், சிம்புவிடம் கதை சொல்லியிருக்கிறேன் அவருக்குப் பிடித்திருக்கிறது அடுத்தபடம் அவருடைய படம்தான் என்று சொல்லியிருந்தார். இப்போது அதில் அதிரடி மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

என்ன காரணத்தாலோ இந்தப்படத்தில் நடிப்பதிலிருந்து சிம்பு பின்வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான இயக்குநர் ஆதிக், இந்தக்கதையை ஜி.வி.பிரகாஷிடம் சொல்லியிருக்கிறார். அவருக்கும் இந்தக்கதை பிடித்திருக்கிறதாம்.அதனால் அவரே அந்தக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம்.

ஜி.விக்கு இப்போது “புருஸ்லி”, “எனக்கு இன்னொரு பேர் இருக்கு”, “கெட்டபையன்டா இந்த கார்த்தி” மற்றும் “கடவுள்இருக்கான்குமாரு” ஆகிய நான்கு படங்கள் இருக்கின்றன.

இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்கப் போகிறாரா அல்லது இவை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் கிடைக்கும் இடைவெளிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பதா என்பது பற்றிப் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்போதைக்குசிம்பு அந்தப்படத்தில் இல்லை என்பதும் அவருக்குப் பதிலாக ஜிவி நடிக்கிறார் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions