சிம்புவின் கெட்டவன் காதல் கதையை படமாக்க நயன்தாரா எதிர்ப்பு?

Bookmark and Share

சிம்புவின் கெட்டவன் காதல் கதையை படமாக்க நயன்தாரா எதிர்ப்பு?

சிம்பு கெட்டவன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் நிஜத்தில் நடந்த காதல் கதை என கூறப்படுகிறது.இருவரும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது நட்பானார்கள். பிறகு காதல் வயப்பட்டனர்.

திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அப்போது ஒருவருக்கொருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

காதல் முறிந்து விட்டது என்று நயன்தாரா வெளிப்படையாகவே அறிவித்தார். பிறகு இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அதன் பிறகு இருவரும் நீண்ட நாட்கள் சந்திக்கவே இல்லை. நயன்தாரா வேறு நடிகர் படங்களில் பிசியாக நடித்தார். அப்போது பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்தது, சிம்புவும் ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். தற்போது இரண்டாவது காதலிலும் இருவரும் தோற்றுள்ளனர்.

இதனால் சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் நட்பு துளிர்விட்டுள்ளது அதன் தொடர்ச்சியாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். நயன்தாராவுடனான காதலை தான் கெட்டவன் என்ற பெயரில் படமாக சிம்பு எடுக்கிறார்.

இது பற்றி நயன்தாராவுக்கு தெரிந்ததும் எதிர்ப்பு தெரிவித்தாராம். எனது காதல் கதையை படமாக்க கூடாது என்ற கண்டிப்போடு கூறினாராம். இதனால் நயன்தாராவை சமரசப்படுத்தும் முயற்சியில் சிம்பு ஈடுபட்டுள்ளார்.


Post your comment

Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions