சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!

Bookmark and Share

சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!

சினிமா எனும் நட்சத்திர உலகில் அவ்வளவு எளிதில் எவராலும் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை. திறமையுடன் போராடும் எத்தனையோ முகம் தெரியா கலைஞர்களுக்கு இன்றும் சினிமா ஒரு எட்டா கணியாகவே இருக்கிறது.

அப்படியான உலகில் சிலர் பிறக்கும் போதே நடிகராகும் வாய்ப்பை பெறுகிறார்கள். அந்த வரிசையில் டி.ராஜேந்தரின் வாரிசாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் போதே லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமானவர் சிம்பு.

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்..அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.

இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது. இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார்.

அவர் அடுத்தடுத்து தேர்வு செய்யும் படங்களை பார்த்தாலும் அப்படித்தான் உள்ளது. இது ஒருபக்கம் இருக்க சிம்பு தற்போது கணிசமாக தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளாராம்.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் அவர் நடிக்கும் முஃப்டி கன்னட படத்தின் ரீமேக்கில் அவருக்கு அட்வான்ஸ் மட்டுமே ஆறு கோடி கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் மீதி சம்பளம் லாபத்தை பங்காக கொடுக்கப்படுகிறதாம். அட்வான்ஸ் தொகையே இவ்வளவு என்றால் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள்.

 


Post your comment





Related News
சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions