சிம்பு வெளிநாடு தப்ப முயற்சியா?: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

Bookmark and Share

சிம்பு வெளிநாடு தப்ப முயற்சியா?: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

நடிகர் சிம்புவின் பீப் பாடல் ஆபாசமாக இருப்பதாக கூறி பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் சிம்பு மீதும், அப்பாடலுக்கு இசை அமைத்திருப்பதாக கூறப்படும் அனிருத் மீதும் புகார்கள் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை சைபர்கிரைம் போலீசார் 2 பிரிவுகளிலும், கோவை ரேஸ்கோர்ஸ் 3 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சிம்பு, கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது சிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆபாச பாடலை வெளியிட்டவர் யார்? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால், சிம்புவை கைது செய்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

சிம்புவுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிம்புவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 4–ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கிடைத்து விடும் என்றும், இதன் மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளலாம் என்றும் சிம்பு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் எதிர் பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை.

இதையடுத்து போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சிம்பு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்வதற்காக சிம்புவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

செல்போனை அணைத்து வைத்து விட்டு சிம்பு ரகசிய இடத்தில் பதுங்கி இருக்கிறார். தமிழகத்தில் பதுங்கி இருந்தால் போலீசார் எப்படியும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் சிம்பு இங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தனிப்படை போலீசாரும் உறுதி செய்தனர்.

சிம்பு பெங்களூரில் பதுங்கி இருப்பதாக நேற்று மாலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதே நேரத்தில் அவர் அங்கு எந்த இடத்தில் இருக்கிறார்? அவருக்கு அடைக்கலம் கொடுத்திருப்பவர்கள் யார்? என்பது பற்றிய உறுதியான தகவல்கள் போலீசுக்கு கிடைக்கவில்லை.

இப்படி சிம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்துக்கொண்டே இருப்பதால் அவரை கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆபாச பாடல் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தபோது, அனிருத் கனடாவில் இருந்தார்.

அங்கு இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருடன் சென்றிருந்த அனைவரும் சென்னைக்கு திரும்பி விட்டனர். ஆனால் அனிருத் மட்டும் சென்னை திரும்பாமல் கனடாவிலேயே தங்கி விட்டார்.

இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பின்னரே அவர் தமிழகத்துக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிம்புவும், அனிருத்தின் வழியையே பின்பற்ற திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்புவின் முன் ஜாமீன் மனு அடுத்த மாதம் (ஜனவரி) 4–ந்தேதிதான் விசாரணைக்கு வருகிறது. அதுவரையில் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்கவே சிம்பு முடிவு செய்துள்ளார். இதற்கு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதே பாதுகாப்பானதாக இருக்கும் என்று அவர் திட்டம் போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சிம்பு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் இருப்பதற்காக சென்னை, பெங்களூர் விமான நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதே போல தென் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் அனைத்துமே உஷார்படுத்தப்பட்டுள்ளன.

சிம்புவை கைது செய்ய சென்னை சைபர்கிரைம் போலீசார் எடுத்து வரும் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளால் பீப் பாடலால் எழுந்துள்ள சர்ச்சையும் சிம்புவுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலும் நீண்டு கொண்டே செல்கிறது.


Post your comment

Related News
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions