சிம்புவின் வாலு மீண்டும் வழக்கை சந்தித்தது

Bookmark and Share

சிம்புவின் வாலு மீண்டும் வழக்கை சந்தித்தது

ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்த பிறகுதான் சிம்பு நடித்த வாலு படம் திரைக்கு வந்தது. இப்போது, சென்னையில் உள்ள ஃபோர் பிரேம் தியேட்டரில் அந்த படத்தை தெலுங்கில் ஷார்ப் என்ற பெயரில் வெளியிடும் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மறுபடியும் அந்த படம் சம்பந்தமாக ஒரு பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்று திரும்பியிருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு வாலு படத்தை தயாரிக்க தொடங்கிய போதே, தெலுங்கு ரைட்ஸ் வியாபாரமாகி விட்டதாம். அப்போதே நிக் ஆர்ட்ஸிடம் ஒன்றரை கோடி ரூபாயை கொடுத்து விட்டார்களாம்.

ஆனால், இப்போது அவர்கள் தெலுங்கு ரைட்ஸ் பற்றி பேசியபோது, கூடுதல் தொகை தர வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு தெலுங்கு ரைட்ஸை வாங்கிய நிறுவனம், ஒன்றரை கோடி ரூபாய்க்கு மூன்று வருடம் வட்டி போட்டு பாருங்கள். அதுவே பெரிய தொகையாகி விடும் என்றார்களாம். அதனால்பிரச்சினை பெரிதாகி விட்டதாம்.

நிக் ஆர்ட்ஸ் வாலு படத்தின் தெலுங்கு ரைட்ஸ்க்காக அக்ரிமென்ட் போட்டுக்கொடுத்த விவரங்கள் அனைத்தும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதாம். அதன்பிறகு நடந்த விசாரணைக்குப்பிறகு அதே தொகைக்கு தெலுங்கு உரிமைத்தை கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பாகி விட்டதாம்.

தெலுங்கு பதிப்புக்கான டப்பிங் வேலைகள் இந்த பிரச்சினை தீர்த்த பிறகுதான் நடக்கிறது. இரண்டு நாட்களில் ஹன்சிகாவுக்கான டப்பிங் முடிந்து விட்ட நிலையில், தற்போது சிம்புவுக்கான தெலுங்கு டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது.


Post your comment





Related News
சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா?
சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா? அதிரவைக்கும் சம்பள விவரம்!
லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்!
ஒரே மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா சிம்பு – கெத்தான புகைப்படங்கள் உள்ளே!
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions