மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா

Bookmark and Share

மீண்டும் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ஹா

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் நடித்திருந்தார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ஹா நடித்திருந்தார்.

ஆக்‌ஷன் கலந்த காமெடியான இப்படத்தில் சிம்ஹாவின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. மேலும் படத்தைப் பார்த்த அனைவரும் சிம்ஹாவிற்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்ஹா ‘உறுமீன்’ என்ற புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை மார்ச் மாதம் 5-ம் தேதியே சிறியதாக போடப்பட்டது. இப்படத்திற்கான போட்டோ சூட்டுகள் மற்றும் படப்பிடிப்புகள் சிறிதளவு தொடங்கப்பட்டது.

பிறகு தனது கதாபாத்திரத்திற்காக முழு வடிவம் கொடுப்பதற்காக சிறிது காலம் கழித்து தற்போது பெரிய அளவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படம் குறித்து சிம்ஹா கூறும்போது, உறுமீன் படம் ஒரு ஆக்‌ஷனான படம்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் படமாக்கவுள்ளது. இப்படத்தின் இயக்குனர் சக்தி. இவர் 3 வருடத்திற்கு மேலாக நண்பராக பழகி வருகிறார். மேலும் இப்படத்தில் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்றும் கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions