சிங்கம்–3 படத்திலிருந்து அனிருத் நீக்கம்?

Bookmark and Share

சிங்கம்–3 படத்திலிருந்து அனிருத் நீக்கம்?

ஹரி இயக்கத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த சிங்கம், சிங்கம்–2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து ‘சிங்கம்–3’ படம் தயாராக இருக்கிறது. சிங்கம் 2 பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக சூர்யாவுடன் நடித்த அனுஷ்கா, இந்த படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். 

இவர்களுடன் சுருதிஹாசன் சி.ஐ.டி. போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்த மாத தொடக்கத்தில் ‘சிங்கம்–3’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. இசை அமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 

ஆனால் படத்துக்கான பாடல்களுக்கு இசை அமைப்பதற்கான எந்த ஏற்பாடுகளையும் அவர் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து அனிருத் நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, மழை– வெள்ளம் காரணமாக ‘சிங்கம்–3’ படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது. பாடல்களும் தயாராகாததால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத நிலை உருவானது. 

தற்போது ‘சிங்கம்–3’ படத்தில் இருந்து அனிருத் நீக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்குப் பதிலாக ஹாரீஸ் ஜெயராஜ் ‘சிங்கம்–3’ இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளர்.

அவர் ‘சிங்கம்–3’ பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார். மேலும் அனிருத் வேறு இரண்டு புதிய படங்களிலுருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
பிக் பாஸில் பங்கேற்கவில்லை - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions