சொம்பு திருடனாக நடிக்கும் சிங்கம்புலி!

Bookmark and Share

சொம்பு திருடனாக நடிக்கும் சிங்கம்புலி!

புதுமுக இயக்குனர் சுவாமிராஜ் இயக்கி தயாரித்துள்ள படம் யோக்கியன் வர்றான் சொம்ப தூக்கி உள்ளவை. இந்த படத்தில் சிங்கம்புலி லீடு ரோலில் நடித்திருக்கிறார். இரண்டு புதுமுகங்கள் காதல் ஜோடிகளாக நடித்துள்ளனர்.

தவிர பல கமர்சியல் நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இப்படம் குறித்து இயக்குனர் சுவாமிராஜ் கூறுகையில், விவரம் தெரியாத இரண்டு கிராம மக்களிடம் பிரச்னையாகி பகையானால் என்னவாகும் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த பிரச்னைக்கு காரணகர்த்தாவாக இருப்பவர்தான் சிங்கம்புலி.

அதேசமயம் இரண்டு ஊருக்கும் பொதுவானவராகவும் இவர்தான் இருக்கிறார். இறுதியில் இரண்டு ஊரும் எப்படி ஒன்று சேருகிறது என்பதைத்தான் காமெடியாக கதையோடு கலந்து சொல்லியிருக்கிறேன்.

அதோடு, சிங்கம்புலியைப் பொறுத்தவரை சொம்பை பார்த்து விட்டால் எப்படியாவது திருடி விடுவார். திருடி விற்று அந்த பணத்தை ஜாலியாக செலவு செய்வார். இதுதான் அவரது கேரக்டர். மேலும், கிராமத்துக்கதை என்றாலும் இதில் ஜாதிமத பிரச்னை எதுவும் கிடையாது. விளையாட்டுத்தனமாக செய்தது விபரீதமாகி விடுகிறது. இதனால் இரண்டு ஊர் நாட்டாமைகளுக்கிடையே மோதல் வெடிக்கிறது.

இதனால் அந்த ஊருக்குள் இந்த ஊர்க்காரன் போக மாட்டேன். இவன் இடத்தில் அவன் மிதிக்க மாட்டான். அதோடு, இவர்கள் ஊருக்கு ஒரு பஸ் செல்லும்.

அந்த பஸ்சில்கூட சேர்ந்து போக மாட்டார்கள். நடுவில் ஒரு கிரில் போட்டு ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்துதான் பயணிப்பார்கள். அதேமாதிரி கோயிலைகூட ரெண்டாக பிரித்து விடுவார்கள்.


இந்த சூழலில்தான் வடக்குப்பட்டியைச்சேர்ந்த பெண்ணுக்கும், தெற்கு பட்டியைச்சேர்ந்த பையனுக்குமிடையே காதல் மலர்கிறது. இந்தவிசயம் தெரியவரும்போது இரண்டு ஊரும் ஆவேசமடைகிறது. அப்போது இரண்டு ஊர் நாட்டாமைகளிடமும் பேசி எப்படி இந்த காதலர்களை சிங்கம்புலி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் இந்த யோக்கியன் வர்றான் சொம்ப தூக்கி உள்ளவை படத்தின் கதை.


தியேட்டருக்குள் வரும் ஆடியன்ஸ் ஒரு சீனில்கூட சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். அதோடு, தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் காமெடியை நினைத்து நினைத்து சிரிப்பார்கள். மேலும், வடக்குப்பட்டி நாட்டாமையாக சாரப்பாம்பு சுப்புராஜூம், தெற்குப்பட்டி நாட்டாமையாக நானும் நடித்திருக்கிறேன்.

இதில் கானா உலக நாதன் யோக்கிய வர்றான் யோக்கிய வர்றான் சொம்ப தூக்கி உள்ளவை என்ற பாடலில் திரையில் தோன்றி நடனமாடியிருக்கிறார். இந்த பாடல் யோக்கியன் என்கிற சிங்கம்புலியின் கேரக்டரை சொல்லும் வகையில் அமைந்துள்ளது என்று கூறும் இயக்குனர் சுவாமி ராஜ், 

இந்த படத்தை எங்கள் ஊரான கோவில்பட்டியில் 1988ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துதான் இயக்கியிருக்கிறேன். ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ள இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் போன்று பாடல்கள் இருந்தாலும் கதைக்களம் வேறு மாதிரியாக இருக்கும். ஆக, இந்த படம் நூறு சதவிகிதம் காமெடிக்கு கியாரண்டி என்கிறார்.

 


Post your comment

Related News
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions