சிவகார்த்திகேயன் படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியது ஏன்?

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியது ஏன்?

சிவகார்த்திகேயன் ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு பிறகு தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தை கடந்த ஜூலை 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ஒலி வடிவமைப்பை ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி கையாள்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் 3 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் வெகுநாட்களாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடி தேடி வந்தனர். சமீபத்தில் ஸ்ருதிஹாசனிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையில் மதுரையில் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார்.

பிறகு ஸ்ருதி சிவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இதுவே இறுதிமுடிவு எனவும் கூறப்பட்டது. இதன் மூலம் ஸ்ருதி-சிவா குறித்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்தது என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் தற்போது “சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கவிருப்பதாகவும்” இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையரிந்த பலரும் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும்? மதுரை சம்பவம் தான் காரணமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions