சிவகார்த்திகேயனின் ரெமோ தலைப்பின் மர்மம்

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் ரெமோ தலைப்பின் மர்மம்

சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். இதற்காக பிரபல ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் இப்படத்தில் பணியாற்றி வருகிறார். 

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தின் தலைப்பு ‘ரெமோ’ என்று அறிவித்ததுமே, இதில் ஏதாவது மர்மம் இருக்குமோ? படத்துக்கும் தலைப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? என பல்வேறு தரப்பிலும் இருந்து சந்தேகங்கள் எழுந்தது. 

தற்போது, அந்த மர்மம் விலகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஆண் மற்றும் பெண் கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் ஆண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் பெயர் ‘ரெ’ என்று தொடங்குமாம். பெண் கெட்டப்பில் வரும் சிவகார்த்திகேயனின் பெயர் ‘மோ’ என்று தொடங்குமாம்.

இதனால்தான் படத்திற்கு ‘ரெமோ’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, மேலும் பல கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ரசூல் பூக்குட்டி சவுண்ட் என்ஜீனியராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். ஆர்.டி.ராஜா இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions