சிவகார்த்திகேயனால் அப்செட்டில் தயாரிப்பாளர்கள்?

Bookmark and Share

சிவகார்த்திகேயனால் அப்செட்டில் தயாரிப்பாளர்கள்?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் சென்னையில் இப்படத்திற்கு பூஜை போட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சமீப காலமாகவே சிவா, கவுதம்மேனனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று குறியாக இருக்கிறாராம்.

ஆனால் அதை சம்பந்தப்பட்ட கவுதமிடம் கூறாமல், தன்னை நாடி வரும் பெரிய பெரிய தயாரிப்பாளர்களிடம் கூறுகிறாராம். அவர் காம்பினேஷன் கிடைத்தால் பாருங்களேன் என்று கூறுவதால், சிவாவை அப்ரோச் செய்த பல தயாரிப்பாளர்கள் அப்செட் ஆகிவிட்டனாராம்.

கவுதமுக்கு என்று சில குணங்கள் உண்டு. முதலில், தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்ல மாட்டார். அப்படியே சொன்னாலும் நாலு வரிக்கு மேல் சொல்ல மாட்டார். பணத்தைக் கேட்க கேட்க வாரியிறைக்க வேண்டும்.

இந்த சங்கடத்தையெல்லாம் தாண்டி வருகிற படம், சில சமயங்களில் தோற்றுவிட்டால், அவ்ளோ தான் துட்டு. இதனாலேயே தயங்குகிறார்களாம்.

அவ்வப்போது சொந்தப்படம் என்று கணக்குப்போட்டு வைத்திருக்கும் சிவகார்த்திகேயனும், கவுதம் மேனன் இயக்குவதாக இருந்தால் வேறொருவர் பணம் போட்டால் தான் என்கிற முடிவில் இருக்கிறாராம்.


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions