இரவில் மிட்நைட் ரைட் செல்லும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

இரவில் மிட்நைட் ரைட் செல்லும் சிவகார்த்திகேயன்!

அதிகாலையிலே சிவகார்த்திகேயனுடன் புல்லட் ரைட் சென்றுவிட்டு அதை டிவிட்டரில் நடிகர் சதிஷ் டுவிட் செய்யததால் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து நடிகர் சதீஷிடம் கூறிய போது,  "சிவகார்த்திகேயன் அவர்களின் புதிய படத்தின் சூட்டிங் ஈசிஆரில் நைட் ஷெட்யூல் நேற்று நடைபெற்றது. பி.சி.ஶ்ரீராமின் கேமரா, அட்லி அசிஸ்டெண்ட் பாக்யராஜ் கண்ணன் இயக்கிறார்.

அதிகாலை மூணு மணி அளவில் கொஞ்சம் ரெஸ்ட் கிடைத்தது அதான் அப்படியே டீ சாப்பிட்டு வரலாம்ன்னு சிவா சொல்லவும் கார் எடுத்துகிட்டு போகலாம்ன்னு  சொன்னோம்.

ஆனா அவர் கண்ணுல அவரோட ப்ரெண்ட் உதய சங்கர் பைக் கண்ணுல பட்டுடுச்சு. காக்கிசட்டை டைம்ல புல்லட் ஓட்டியது அதனால நம்ம அதில போவோம்,மத்தவங்க கார்ல வரட்டும்ன்னு சொல்லிட்டார்.  

செம குளிர் சார், பின்னாடி உட்கார்திருந்த என்னாலேயே தாங்க முடியலை, நடுங்கிகிட்டே இருந்தேன். ஆனா அவர் ஜாலியா பைக்க ஓட்டிட்டு ஒரு  டீக்கடையில் போய் நிறுத்தினார். முதலில் கடைக்காரருக்கு அடையாளம் தெரியலை, டீ கொண்டு வந்து கொடுக்கும் போதுதான் கண்டுபிடிச்சாரு.

ஆனா அந்த நேரத்திலேயும் கார்ல போனவங்க அடையாளம் கண்டு பிடிச்சு வண்டியை திருப்பிகிட்டு வந்து போட்டோஸ் எடுத்துக்க ஆரம்பிச்சாங்க.

ஷூட்டிங்கிற்கு வேற லேட்டாகிடுச்சு அப்ப பார்த்துதான் டீக்கடைக்காரர் 'இந்நேரத்துக்கு ரெண்டு பஸ்ஸு வரும் இன்னும் காணோம்'ன்னு தேட ஆரம்பிச்சாரு, சரித்தான்னு எஸ்கேப் ஆகிட்டோம்." என்றார்.

 


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions