சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள்: நடிகர்-நடிகைகள் வாழ்த்து

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள்: நடிகர்-நடிகைகள் வாழ்த்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சென்ற வருடத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி நடை போட்டது. இதனால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நடிகர்களில் இவரும் ஒருவராக திகழ்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள். இவரது பிறந்தநாளையொட்டி தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடிகையர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நடிகர்கள் தனுஷ், சதீஷ், இசையமைப்பாளர்கள் அனிருத், டி.இமான், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, இயக்குனர்கள் துரை.செந்தில்குமார், பொன்ராம் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற பிப்.27-ந் தேதி ‘காக்கிச்சட்டை’ படம் வெளிவர இருக்கிறது. ‘காக்கிச்சட்டை’ படக்குழுவும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ரஜினிமுருகன்’ படக்குழுவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது.

இதையெல்லாம் தாண்டி, நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் குழுவும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது. 


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions