2016.. மசாலா தடவிக்கொண்டு எண்ணெய் சட்டிக்குள் விழுந்த கோலிவுட் கோழிகள்!

Bookmark and Share

2016.. மசாலா தடவிக்கொண்டு எண்ணெய் சட்டிக்குள் விழுந்த கோலிவுட் கோழிகள்!

எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டும் தமிழ் சினிமா வைப்ரேட் மோடிலேயேதான் இருந்தது. ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும் சில வைரல்கள் அவ்வப்போது தோன்றி நம்மை மகிழ்வித்தன. அவற்றில் சில...

அவரை வேலை செய்ய விடுங்க...!

ரெமோ படத்தின் சக்சஸ் மீட். உள்ளே நுழையும்போதே தந்தி டிவி லைவ் டெலிகாஸ்ட் செய்துகொண்டிருக்க ஏதோ நடக்கப் போவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. வழக்கம்போல எல்லோரும் சொரிந்து தள்ள இறுதியில் மைக்கை பிடித்தார் சிவகார்த்திகேயன். எழுதி வைத்திருந்ததை போல நன்றி சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிவிட்டு தொடங்கினார் 'விஜய் அவார்ட்ஸ் பெர்ஃபார்மென்ஸை'.சுமார் நாற்பது கோடி செலவில் படத்தை தயாரித்த ஆர்டி.ராஜாவை காண்பித்து 'ஒரு கார் கூட அவருக்கு சொந்தமா இல்லை' என்று சொல்லிவிட்டு 'என்னங்க பண்ணினார் அந்த மனுஷன்?' என்று கேட்க 'எங்களுக்கு என்ன பாஸ் தெரியும்?' என விழித்தனர் நிருபர்கள். 'அவரை வேலை செய்ய விடுங்க...' என்று கண்ணீர் சிந்தி எமோஷனலாக இதுவரை சிவகார்த்திகேயனிடம் இந்த எமோஷனலை ஃப்ரேமில் வாங்க முடியாமல் அழுகை காட்சிக்கு மழையை வரவழைத்து சமாளிக்கும் அவரது இயக்குநர்கள் அதிர்ச்சியடைந்தனர்.'அவரை வேலை செய்ய விடுங்க...' வார்த்தைகள் வைரலாக சிவாவை போட்டு தாக்கினார்கள் நெட்டிசன்கள். சிவா மீது பஞ்சாயத்துகள் நீண்டுகொண்டே போக ஒருவழியாக கார்டனுக்குள் நுழைந்து தனக்கு பாதுகாப்பு தேடிக்கொண்டார். அதாவது ஒரு கோழி தன் உடம்பில் தானே மசாலா தடவிக்கொண்டு எண்ணெய் சட்டிக்குள் குதித்துக்கொண்டது...!

கூண்டைவிட்டு பறந்த மைனா 

ரூபாய் நோட்டு விவகாரத்தை விட தமிழன் அதிகம் பேசியது அமலாபால் விவாகரத்தைதான். இயக்குநர் விஜய்யை கல்யாணம் கட்டிக்கொண்டு 'குடும்பமாச்சு... வெளி நாட்டு ட்ரிப்பாச்சு' என்று சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அமலாபாலை சுற்றிச் சுழன்றடித்தன கிசுகிசுக்கள். விரைவில் விவாகரத்து காரணம் கட்டுக்கடங்காத சினிமா நடிப்பு ஆர்வம்தான் என்று கிசுகிசுக்கள் வர 'சிந்துசமவெளி பார்ட் 2' எடுக்க தயாரானார் சாமி. கிசுகிசுக்கள் உண்மையாக இன்னுமொரு அதிர்ச்சி செய்தியாக 'இதுக்கு காரணம் தனுஷ்தான்' என்று தீயாய் பரவியது செய்தீ. இதுமட்டுமில்லாமல் விஜய் ஜேசுதாஸ், சவுந்தர்யா ரஜினிகாந்த், கவுதமி என்று வரிசையாக தமிழ்நாட்டில் குடும்ப நல கோர்ட்டுக்கு சரியாக வேலை கொடுத்து வருபவர் தனுஷ் என்ற வகையில் கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பற்றி கவலையேப்படாமல் அதே சவுந்தர்யா இயக்கத்தில் ஒரு படமும் அமலாபால் ஜோடியாக இரண்டு படங்களும் நடித்து வருகிறார் தனுஷ். நெட்டிசன்கள் சும்மா இருந்தாலும் தான் சும்மா இருக்காமல் அரைகுறை ஆடையுடன் படங்களை வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் அமலா பால். முதல்ல மைனாவை ஏண்டா கூண்டுல அடைச்சீங்க?

கைப்புள்ள ஜிவி.பிரகாஷ் 

ரிலீஸான படங்கள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி வர, தன்னை சமூக வலைத் தளங்களில் வைரலாக்கிக் கொள்ள தல தளபதி சண்டையை கையில் எடுத்தார் ஜிவி.பிரகாஷ். அஜித் ரசிகர்களை சீண்டும் விதமாக ஒரு ட்விட் போட்டு அந்த நல்ல காரியத்தை ஆரம்பித்தார். தேன் கூட்டில் கல்லெறிந்தால் சும்மா இருப்பார்களா கீச்சர்கள்? ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று வசவுகள் ட்விட்களாக பெருக, வெறுத்துப் போன ஜிவி ட்விட்டரை விட்டே எஸ்கேப் ஆனார். அதாவது படமே இல்லாவிட்டாலும் கூட அல்லது எந்த படமுமே ஓடாவிட்டாலும் கூட இப்படி ஏதாவது பண்ணிக்கிட்டே இருந்தா நம்மளை மறக்கவே மாட்டாங்கள்ல? சூப்பர் பாஸ்... இவ்வளவு சீக்கிரம் இந்த முக்கியமான கான்செப்டை கத்துக்கிட்டீங்களே... சிம்புவை விட பெரிய ஆளா வருவீங்க... ஆனா ஒண்ணு உங்களால உங்க குடும்பத்து பெண்களையும்ல அசிங்கப்படுத்திடுச்சு அந்த 'நாகரீக கூட்டம்'?


Post your comment





Related News
சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions