தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?

Bookmark and Share

தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?

மிஸ்டர் லோக்கல் படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை விட மிகவும் சுமாராகவே வந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் கடும் அதிருப்தியில் உள்ளாராம்.எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்ளிடம் படு மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சகர்கள் ஒருபக்கம் இப்படத்தை கழுவி ஊற்றி வருகிறார்கள்.இதுபோக இப்படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை விட மிகவும் சுமாராகவே வந்துள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் கடும் அதிருப்தியில் உள்ளாராம். எனினும் இதை எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறாராம். மேலும் இந்த படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என தீயாய் வேலை செய்து வருகிறாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions