தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!

Bookmark and Share

தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!

மிஸ்டர் லோக்கல் படம் மற்றொரு தோல்வி படமாக அமைந்து, ஒட்டுமொத்தமாக அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற தவறியிருக்கிறது மிஸ்டர் லோக்கல்.தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி அந்தஸ்தை எட்டியவர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து படிபடியாக உயர்ந்தவர் என்பதால் இவருக்கு குடும்ப ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் தொடர் தோல்விகளால் சிவகார்த்திகேயனின் கேரியர் தற்போது சறுக்கலை சந்தித்து வருகிறது. அடுத்தடுத்து வெற்றிகளை குவித்த சிவகார்த்திகேயனுக்கு 2017-ம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படத்தின் தோல்வி முதல் அதிர்ச்சியை கொடுத்தது.

அதன்பின் வெளியான சீமராஜா படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஓபனிங் இருந்தும் படம் தோல்வியில் முடிந்தது.இந்த நிலையில் கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்ற சூழலில் கடந்த வாரம் வெளிவந்திருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இப்படத்தை கேலி செய்து வெளியாகும் மீம்களும் வீடியோக்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகும் அளவு இப்படம் நெட்டிசன்களால் கேலிக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்நாளில் இப்படம் ஆறு கோடியே முப்பது லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.

அதேபோல் சென்னையில் முதல் மூன்று நாட்களில் இப்படம் ஒரு கோடியே 90 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. இது சீமராஜா படத்தின் வசூலில் பாதி அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.சிவகார்த்திகேயன் மட்டுமின்றி படத்தின் நாயகியான நயன்தாராவுக்கும் இது முக்கியமான படம்.

தொடர்ந்து நாயகி சார்ந்த படங்களில் நடித்து வெற்றிபெற்ற நயன்தாரா, அதன்மூலம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். ஆனால் அதே வேகத்தில் தற்போது ஐரா, மிஸ்டர் லோக்கல் என இவருடைய கேரியரும் சரிவை சந்தித்து வருகிறது. 

இப்படி குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார்களாக உருவெடுத்த சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் தற்போது அதே வேகத்தில் சறுக்கலை சந்தித்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் தொடர் தோல்விகளால் தவித்து வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ராஜேஷ் ஆகியோருக்கும் இப்படம் மற்றொரு தோல்வி படமாக அமைந்து, ஒட்டுமொத்தமாக அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற தவறியிருக்கிறது மிஸ்டர் லோக்கல்.

 


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.!
வேலைக்காரன் படத்திற்கு அடித்த ஜாக்பாட் - மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!
வேலைக்காரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? - அறிவிப்பை வெளியிட்ட அனிருத்.!
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
நயன்தாரா படத்தில் நடிக்க 15C சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா?
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions