சிவகுமார் கூறிய இரு உதாரண புருஷர்கள்!

Bookmark and Share

சிவகுமார் கூறிய இரு உதாரண புருஷர்கள்!

சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் 12 ஆம் வகுப்பில் சாதனை மதிப்பெண் பெற்ற மாணவர்கள்களுக்கான 36 வது ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது.

இவ்விழாவில் சிவகுமார் பேசும்போது: "பல்வேறு சிரமங்களிலிருந்து தடைகளை உடைத்து முன்னேறியுள்ளீர்கள் இந்த வகையில் நான்தான் உங்களுக்கு முன்னோடி என்பேன். கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் உலகில் எந்த மூலையிலும் ஜெயிக்க முடியும்.

புழுதி மணல் பரப்பி அ.ஆ எழுதிய என் பள்ளிப் பருவம் இப்போது என் நினைவுக்கு வந்தது. அப்போது சிலேட்டு கூட இல்லாமல் இருந்தேன். சிலேட்டு வாங்க வசதியில்லாமல் இருந்தேன்..

கல்வியும் ஒழுக்கமும் முக்கியம். 57 ஆண்டுகளாக என் நாக்கில் டீ, காபி பட்டதில்லை. டீ, காபி சாப்பிடா விட்டால் உயிர் போய் விடுமா என்ன? எனக்குத் தெரிந்து உங்களுக்கு இருவர் பற்றி இரு உதாரண புருஷர்கள் பற்றி மட்டும் கூறுகிறேன்.

தமிழகத்தின் கடைக் கோடியில் ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாக பிறந்து காலையில் பேப்பர் போட்டு படித்தவர் அப்துல் கலாம். திருச்சியில் கல்லூரி விடுதியில் அசைவ சாப்பாடு 18 ரூபாய், சைவ சாப்பாடு 14 ரூபாய், 4 ரூபாய் மிச்சப்படுத்த சைவமானவர் அவர். அப்போது சைவமானவர் இன்று வரை அவர் சைவம்தான். ஜனாதிபதி மாளிகையில் தன் உறவினர் தங்க சலுகையிருந்தும் அதற்கான செலவை தன் சொந்தப் பணத்தில் கொடுத்தவர்.

அவர் ஒரு உதாரண புருஷர்.  இன்னொருவர் சீனிவாச சாஸ்திரி. சாதாரண ஏழை பிராமணராக வலங்கைமானில் பிறந்தவர். சர்ச்சிலின் ஆங்கிலப்பேச்சில் குறை கண்டு அவருக்கு கடிதம் எழுதினார். தன் ஆங்கிலப் பேச்சில் குறை கண்டவரை சர்ச்சில் அழைத்த போது இங்கிலாந்து சென்று நேரில் குறை கண்டு கூறியவர்.

ஆங்கில இலக்கண நூல் தயாரித்த குழுவில் சர்ச்சில் இவரையும் சேர்த்தபோது அங்கும் பல குறைகள் இருப்பதைக் கண்டு பிடித்தவர். அப்படிப்பட்டவர் காந்திக்கும் குறை கண்டார். காந்தியின் மக்கள் செல்வாக்கைக் கண்டு பிறகு அதை கை விட்டவர். வாழ்ந்தால் இவர்களைப் போல வாழ வேண்டும்." இவ்வாறு சிவகுமார் கூறினார்.


Post your comment

Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்
சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு! அதனால்தான் இப்படியுள்ளாரா
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
அகரம் பவுண்டேஷனுக்காக வாழ்ந்துவந்த வீட்டை தானமாக கொடுத்த சிவகுமார்
பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆவணப்படத்தை வெளியிட்ட சிவகுமார்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions