மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா

இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.

இவ்விரு படங்களிலும், இவரது நடிப்பு அதிகம் பேசப்பட்டது, இந்நிலையில், தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கிறார்.

ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், விரைவில் இறுதி செய்யப்பட்ட படக்குழுவினரையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்.


Post your comment





Related News
சூர்யாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் - உருகிய செல்வா!
என்.ஜி.கே தோல்வியால் சிக்கலில் மாட்டிய சூர்யாவின் இன்னொரு படம் – பரிதாப நிலை!
என்.ஜி.கே தோல்வி குறித்து முதன் முறையாக மனம் திறந்த சூர்யா - வைரலாகும் பதிவு!
செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா - ஆச்சரியப்படுத்தும் தகவல்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
சூர்யா ஏன் இதை செய்யவில்லை - இணையத்தில் சூர்யாவை வறுத்தெடுக்கம் ரசிகர்கள்!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை
சூர்யா ஒன்னும் சிவகுமார் மாதிரி இல்ல, அத்துமீறி உள்ளே நுழைந்த ரசிகருக்காக என்ன செய்துள்ளார் பாருங்க.!
சூர்யா - சிவா படம் குறித்த தாறுமாறான அப்டேட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions