நான் நடிகர் ஆகும் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன்: எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

நான் நடிகர் ஆகும் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன்: எஸ்.ஜே.சூர்யா

விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி நடித்த ‘இறைவி’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இறைவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய எஸ்.ஜே.சூர்யா....

“நான் நடிகர் ஆகும் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக ‘வாலி’, ‘குஷி’ படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் இயக்குனர் ஆனேன்.

‘நியூ’, ‘வியாபாரி’, ‘இசை’ உள்பட பல படங்களில் நடித்தேன். இப்போது முதல் முறையாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ‘இறைவி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன்.
இறைவி பெண்களின் உணர்வை மதிக்கும் இந்த படம் எனது கனவில் ஒரு பாதியை நிறைவேற்றும் படம்” என்றார்.

விஜய் சேதுபதி இறைவி படம் பற்றி கூறும்போது,

“ஆண்களின் உலகை சுற்றி அம்மா, மனைவி, சகோதரி, காதலி என்று இருக்கும் இவர்களின் கதையே இறைவி. வெளியே காட்டாமல் விட்ட பெண்களின் மறுபக்கமே இதன் கதை.

இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வருபவர்கள், இவர்களை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற உணர்வுடன் உருவார்கள். பல படங்களில் நான் நடித்திருக்கிறேன் என்றாலும் ‘இறைவி’ திரையிடப்படும் முதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் சேர்த்து பார்க்க விரும்புகிறேன்” என்றார்.



Post your comment





Related News
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
விஜயின் பெற்றோர்களுடன் மரண மாஸ் கெட்டப்பில் சூர்யா – புகைப்படத்துடன் இதோ!
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions