பால் போட்ட பிரசன்னா..... சுழற்றி அடித்த சினேகா!

Bookmark and Share

பால் போட்ட பிரசன்னா..... சுழற்றி அடித்த சினேகா!

ஸ்டூடியோ  9 நிறுவனத்தின் மூலம் ஆர்.கே சுரேஷுடன் இணைந்து   கிட்டத்தட்ட 18 படங்களை விநியோகம் செய்தவர். நாசர் அலி. தற்போது    Naro Media  என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். 

அ.நாசர் அலி (CEO) மற்றும் Dr.ரொஃபினா சுபாஷ் (COO) இருவரும் இணைந்து HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பட்டுக்காகவும் நிதி திரட்டும் வகையில் "Just Cricket " எனும் கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இந்த போட்டியில் சென்னையை சார்ந்த 32 அணிகள் கலந்துகொண்டனர்.

இதனால் வரும் நிதியானது HIV யினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்கும். மருத்துவ செலவுக்கும். வழங்கப்படுகிறது. 
நவம்பர்  27ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தொடங்கிய இந்த போட்டியானது சென்ற வாரம் டிசம்பர்  4ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.. இதன் இறுதிப் போட்டியானது  இன்று டிசம்பர்  11ம் தேதி நந்தனம் YMCA மைதானத்தில் நடை பெற்றது. .

இதில் திரைப்படத் தயாரிப்பாளர்  R.K .சுரேஷ் மற்றும் இயக்குனர்கள் V.Z.துரை, மீரா கதிரவன் போன்றோரும் நடிகர்கள் ஷாம்,பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், ப்ரஜன், கோலிசோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா க்ரிஷ், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்  தியா  ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர் . மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின்   "சென்னை 600028" படக்குழுவும், பழைய வண்ணாரப்பேட்டை படக்குழுவும், விழித்திரு படக்குழுவும் வருகைதந்து போட்டியை உற்சாகப்படுத்தினார்..

இந்நிகழ்வில் சினேகா பால் போட பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும்  மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். ஷாம் குழந்தைகள்  பாடிய பாடலுக்கு கண்கலங்கி ஆறுதல் கூறினார். இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது சென்னை 600028 படக்குழுவும்  வெற்றிபெற்ற   எப் சி சி அணியோடு கிரிக்கெட்   விளையாடியாடினார்.   அனைத்து பிரபலங்களும் இணைந்து ரூபாய் 25,000/- க்கான  முதல்    பரிசை வழங்கினர். இரண்டாம் பரிசை  சீ ஹார்ஸ் அணியும் தட்டிச் சென்றது.  அவர்களுக்கு 15,000/- ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 

நடிகர் பிரசன்னா குழந்தைகளிடையே பேசும்போது  இங்கே யாருடைய வாழ்வும் நிரந்தரம் அல்ல. இருக்கும்வரை சந்தோசமாக வாழ்வோம்..நீங்கள்  யாரும் தனிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்றபோது குழந்தைகள் அனைவரும் இளகினர். மொத்தத்தில் இந்நிகழ்வு  நட்சத்திரங்களுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும்   ஒரு உருக்கமான நிகழ்வாக அமைந்தது. 

இந்த தொடரின் முதல் பரிசை  HOTEL MILLATH நிறுவனமும் இதர பரிசுகளை திரு. அரவிந்த், வேலு மிலிட்டரி ஹோட்டல், அம்மா நானா, WHITE CLIFS ஆகியோரும் வழங்கி வீரர்களை கவுரவப்படுத்தினர் . 

மேலும் "7up"  நிறுவனம் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் "Revive" பானம் வழங்கி உற்சாகப்படுத்தினார்.  நந்தனம்  YMCA (பவிலியன்) மைதானத்தில் நிகழ்வு நடைபெற்றது.


Post your comment

Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று!
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions