தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்றுள்ள S/O சத்தியமூர்த்தி

Bookmark and Share

தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்றுள்ள  S/O சத்தியமூர்த்தி

டோலிவுட் வட்டாரத்தில் ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை அதிகமாக கவர்ந்துள்ள நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி வரும் S/O சத்தியமூர்த்தி படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் நடிகை சமந்தா, நடிகை நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.  அண்மையில் திரைக்கு வந்த இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  இதனால் இப்படம் அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விஜய்யை பார்க்க வந்த பிரம்மாண்ட கூட்டம் – இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன நடிகை!
தளபதி 63 படப்பிடிப்பில் இணைந்த மிகப்பெரிய பிரபலம் – யார் தெரியுமா?
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions