சோனம் கபூரின் நீர்ஜா படத்துக்கு பாகிஸ்தானில் தடை

Bookmark and Share

சோனம் கபூரின் நீர்ஜா படத்துக்கு பாகிஸ்தானில் தடை

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள நீர்ஜா படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினர். அப்போது பயணிகளைக் காப்பாற்ற முயன்ற விமான பணிப்பெண் நீர்ஜா பனோட்டை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

அவரை மையப்படுத்தி பாலிவுட்டில் ராம் மத்வானி இயக்கத்தில் நீர்ஜா என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்துள்ளார். இப்படம் வரும் 19-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை வாங்கி வெளியிடுவதற்கு முதலில் தடையில்லா சான்று அளித்த தகவல் மற்றும் வர்த்தகத்துறை பின்னர் அதனை விலக்கிக்கொண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேபிள் மூலம் படத்தை காண்பிக்கக்கூடாது என்றும் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திடம் கூறியுள்ளது.

நீர்ஜா படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions