இணையதள வாசிகளுக்கு சவால் விட்ட நடிகையின் ஸ்ரீதேவி மகள்!

Bookmark and Share

இணையதள வாசிகளுக்கு சவால் விட்ட நடிகையின் ஸ்ரீதேவி மகள்!

சமூகவலைதளங்களில் பிரபலங்கள் நேரடியாக ரசிகர்களின் கேலிகளையும், கிண்டல்களையும் எதிர்கொண்டு, அவர்களின் கருத்திற்கு பதில்களையும் அளிக்கின்றனர். 

ஆனால் தற்போது பிரபலங்கள் மட்டுமின்றி அவர்களது பிள்ளைகளும் இது போன்ற கேலி, கிண்டல்களை எதிர்கொள்கின்றனர். 

பெரும்பாலான பிரபலங்களின் பிள்ளைகள் அவ்வப்போது அவர்களது புகைப்படங்களை ட்விட்டர், முகநூல், இன்ஸ்டக்ரம் போன்ற சமூகவலைதளங்களில் பதிவு செய்வதுண்டு. அவை வைரலாகவும் மாறி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுண்டு.

தற்போது இவ்வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள விஷயம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் இன்ஸ்டக்ரமில், ஒருவரது உடலமைப்பை கிண்டல் செய்து, அநாகரிகமாக கருத்துகளைப் பதிவு செய்பவர்களைக் குறித்து, அவர் கூறியுள்ள கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

என் புகைப்படத்தை நான் பதிவிடும் போது, அவை பதிவிடுதலுக்கு ஏற்றது என்ற நம்பிக்கையுடனே பதிவிடுகிறேன், விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்தோடும் ,நான் அதைச் செய்வதில்லை.

எப்போது நான் எனது புகைப்படத்தினை பதிவு செய்தாலும் உடனே என் தோற்றம், உடை போன்றவற்றை மதிப்பீடு செய்வதில் அதிக உரிமை எடுத்துகொள்கின்றனர் சிலர். 

எனக்கு அது சரி என்று தோன்றும் போதே நான் என் புகைப்படத்தை வெளியிடுகிறேன். ஒவ்வொருவருக்கும் அவரது கருத்துகளைக் கூற உரிமை உண்டு, ஆனால் ஒருவரைப் பற்றி இழிவாகவோ, அவரைத் தாக்கியோ கருத்து  கூறும் போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து கூறுங்கள். 

இது வேடிக்கையாக எடுத்துக்கொள்ளக் கூடிய விஷயம் அல்ல. இன்றளவும் பெண்கள் அவர்களது உடலமைப்பிற்காகக் கேலி செய்யபடுவது வருத்தமான விஷயம். 

இனி இதுபோன்ற விஷயங்களுக்காக நான் கவலைபடப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.15 வயதே நிரம்பிய குஷி கபூரின் இந்தக் கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதற்குமுன்னதாக பூஜா பேடியின் மகள் ஆழியாஹ்வின் புகைப்படம் குறித்து சிலர் இழிவாகக் கூறிய கருத்திற்கு, ஆழியாஹ் தன்னை கேலி செய்தவர்கள் தங்களது வாயை மூடிக்கொள்ளும் படி, தனது தெளிவான, உறுதியான பதிலைக் கூறியிருந்தார். 

ஒவ்வொரு பெண்ணிற்கும் தான் விரும்புகின்ற உடையை அணிந்து கொள்ள உரிமை உண்டு.வழக்கமாகவே ஒரு பெண் தான்  உடுத்துகின்ற உடையின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறாள்.

அப்படி பார்த்தால் இந்தியப் பெண்கள், அரபுநாட்டில் உள்ள பெண்களை விட ஒழுக்கங்கெட்டவர்கள், ஏனென்றால் நாம் நம் முகங்களை பிறருக்குக் காட்டுகின்றோமே" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்களின் பிள்ளைகளோ அல்லது சாதாரணப் பெண்களோ, யாராக  இருந்தாலும் அவர்களது உடலமைப்பை சாடுவது என்பது விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இல்லை என்பதை, இக்காலத்து இளைஞர்களுக்கு, உணர்த்தியுள்ளனர் நம் இளம் பெண்கள்.இதில் நடிகர் நடிகைகளின் மகள்கள் மட்டுமல்ல, சாதாரணப் பெண்களும் சிக்கித் தவிக்கிறார்கள்.

சமூக வலைதளங்கள் என்பது ஆண்களுக்கு எப்படியோ அதே போல் தான் பெண்களும் தங்கள் சந்தோஷ, தருணங்களைப் பகிர்ந்துகொள்ள, புகைப்படங்களைப் பகிர என பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆண்களுக்குக் கிடைக்காத அந்த கிண்டல்களும், கேலிகளும் பெண்களுக்கு மட்டும் ஏன். ஏன் என்ற கேள்வி பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

 


Post your comment

Related News
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions