கவர்ச்சி கிரீன் சிக்னல் காட்டும் ஸ்ரீதிவ்யா!

Bookmark and Share

கவர்ச்சி கிரீன் சிக்னல் காட்டும் ஸ்ரீதிவ்யா!

காக்கி சட்டை படத்தையடுத்து ஸ்ரீதிவ்யா நடிப்பில் பென்சில், ஈட்டி ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயார்நிலையில் உள்ளன. இந்த படங்களில் பென்சில் படத்தில்தான் நடிப்பதற்கு காட்சிகள் அதிகம் உள்ளதாம்.

மற்றபடி ஈட்டியில் முழுக்க முழுக்க அதர்வாவை மையப்படுத்திய கதை என்பதால் பெயரளவுக்குத்தான் ஸ்ரீதிவ்யா பயன்படுத்தப்பட்டிருக்கிறாராம். ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்று டம்மியான ஹீரோயினாக நடிப்பது வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் ஸ்ரீதிவ்யாவுக்கு அட்வைஸ் செய்ததை அடுத்து, புதிதாக கதை கேட்கும் டைரக்டர்களிடம் இரண்டு பாட்டுக்கு மட்டுமே வந்து ஆடிவிட்டு செல்லும் கதாநாயகியாக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

அதனால் வெயிட்டான கதாநாயகி வேடம் இருந்தால் மட்டும் சொல்லுங்கள். இல்லையேல் வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக பேசி வருகிறார் ஸ்ரீதிவ்யா.

ஆனால் அவர் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகளுடன் யாருமே அவரை தேடிச்செல்லவில்லையாம். அதனால்தான் தற்போது தெலுங்கில் ஒரு வாரதி என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழை விட தெலுங்கில் அதிகப்படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

அதனால், தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கும் அவர், அங்குள்ள மெகா ஹீரோக்களின் படங்களில் நடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், கவர்ச்சி கொடியை பறக்க விடவும் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.


Post your comment





Related News
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions