தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு?

Bookmark and Share

தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு?

பிரின்சஸ் மகேஷ் பாபு நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்ரீமந்துடு படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கும் இப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகின்றார்.

ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்பட வெளியீடு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.இசையமைபாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்தை நடிகர் மகேஷ்பாபு மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions