சுஹாசினி பேச்சு, சமூக வலைத்தளங்களில் சலசலப்பு...

Bookmark and Share

சுஹாசினி பேச்சு, சமூக வலைத்தளங்களில் சலசலப்பு...

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் 'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது பேசிய மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி, “உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன், எங்களை விட பலம் வாய்ந்த பேனாவை நீங்க கையில வச்சிக்கிட்டிருக்கீங்க.

எப்படி குவாலிஃபைட் பியூப்பிள்தான் படத்துல நடிக்க முடியுமோ, சினிமாட்டோகிராபி பண்ண முடியுமோ, ரகுமான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ, அதே மாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான், விமர்சனம் எழுதணும்.

நீங்கள்லாம் இருக்கும் போது, எல்லாரையும் எழுத விட்றாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க. இப்ப கம்ப்யூட்டர் உலகத்துல, மவுசை மூவ்  பண்ண தெரிஞ்சவங்கள்லாம் எழுத்தாளர் ஆகிட்டாங்க.

அப்படி விட வேண்டாம், நீங்கள்லாம் இவ்வளவு குவாலிஃபைடா இருக்கும் போது, எதுக்கு மத்தவங்களை எழுத விடறீங்க. உங்களை நம்பிதான் நாங்க இருக்கோம், இந்தப் படத்தைப் பத்தி நல்லா எழுதுங்கன்னு வேண்டிக்கிறேன்,” என வெளிப்படையாகப் பேசினார்.

சுஹாசினியின் இந்தக் கருத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் சகட்டு மேனிக்கு 'கமெண்ட்' அடித்து எழுதுபவர்கள், சுஹாசினியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பல கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

சமீப காலமாக ஒரு நடிகரின் ரசிகர்களுக்கும், வேறொரு நடிகரின் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்களில் சமூக வலைத்தளங்கள் ஒரு அடித்தளமாக பயன்பட்டு வருகிறது.

சில கருத்துக்கள் படங்களைப் பற்றியும் மீறி அவர்களது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றித் தரக்குறைவாகவும் சித்தரிக்கும் விதமாகவும் மாறி வருகிறது. எப்படி சமூக வலைத்தளங்களில் அவரவர்க்கு கருத்துக்களைச் சொல்ல உரிமை இருக்கிறேதோ, அதே போலத்தான் சுஹாசினியும் அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

டிஜிட்டல் காமிராக்களின் வளர்ச்சியால் இன்று பல பேர் படம் எடுக்கக் கிளம்பி வந்து விட்டதைப் போல, ஃபேஸ்புக், டிவிட்டரிலும் பல பேர் விமர்சனம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதைக் கிண்டலும், கேலியுமாக பலர் இன்னும் 'ஷேர்' செய்வதும் அதிகரித்து வருவது திரையுலகத்திற்கு பாதகமாகவே அமைந்து வருகிறது.


Post your comment

Related News
மக்களுக்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் மணிரத்னமும், சுஹாசினியும் செய்த செயல்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து கூறினேனா?- நடிகை சுகாசினி விளக்கம்
பாதித்த மக்களுக்கு புதிய உடைகளை வாங்கி கொடுங்கள்: சுஹாசினி வேண்டுகோள்
மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி தகவல்
மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் படத்தை விமர்சனம் செய்கிறார்கள்: சுஹாசினி ஆவேசம்
லக்சம்பர்க் நாட்டின் தூதரானார் சுஹாசினி!
சுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை
அக்டோபர் 6 மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது
சுஹாசினி நடித்த தெலுங்குப் படம் ஆஸ்கர் செல்லுமா...?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions