சுந்தர்.சியுடன் மீண்டும் இணைந்த நடிகர் சதீஷ்

Bookmark and Share

சுந்தர்.சியுடன் மீண்டும் இணைந்த நடிகர் சதீஷ்

சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ படத்தில் விஷால், வைபவ் உடன் காமெடி வேடத்தில் நடித்தவர் சதீஷ். இவர் தற்போது சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் காமெடியனாக நடிக்கவிருக்கிறார். 

இதில் சுந்தர்.சிக்கு ஜோடியாக ஏற்கெனவே பூனம் பஜ்வா தேர்வாகியிருந்தார். இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘வெள்ளிமூங்கா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். சுந்தர்.சியின் உதவியாளர் வெங்கட் என்பவர் இயக்கவிருக்கிறார். 

இதில் நடிப்பதோடு தயாரிக்கும் பணியையும் சுந்தர்.சி மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மார்ச் 11-ந் தேதி தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது இன்றே இப்படத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் தலைப்புடன் கூடிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
ரிலீஸ் தேதியோடு ஒளிந்திருக்கும் பல சுவாரஷ்யங்கள் – தர்பார் பர்ஸ்ட் லுக் சீக்ரெட்ஸ்.!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரெஜினா?
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions