கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது கடும் கோபத்தில் ஜெனிலியா கணவர்!

Bookmark and Share

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது கடும் கோபத்தில் ஜெனிலியா கணவர்!

திரையுலகில் ஒரு நடிகையின் பெயர் நீண்ட நாட்களுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது குதிரை கொம்பிற்கு ஈடானது. அதுவும் புதுமுக நாயகிகளின் வருகை அதிகரித்துள்ள தற்சமயத்தில், 34 வயதில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார் சன்னி லியோன்.

இரண்டு ஆண்டுகளாக கூகுள் தேடலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள சன்னி லியோன், தற்போதும் 2016இல் வெளிவர இருக்கும் அவரது படம் “மஸ்த்திஜடே’வின் டிரெய்லர் மூலம் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே தனக்கான தேடல் படலத்தை உருவாக்கிவிட்டார்.

படத்தின் டிரெய்லர் பலத்த சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது. இதனால், மீண்டும் சன்னி லியோனின் பெயர் செய்திகளில் பரவலாக இடம்பெறத்தொடங்கிவிட்டது.

இப்படத்தின் டிரெய்லர் டிசம்பர் 23, 2015 அன்று யுடியூபில் வெளியிடப்பட்டது. ஒரு பக்கம் எதிர்ப்புகள் என்றாலும் தற்போது 20 லட்சம் பார்வையாளர்களை டிரெய்லர் கவர்ந்துள்ளதால், சன்னி லியோன் ரசிகர்களுக்கு, ட்விட்டர் பக்கத்தில் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்னொரு பக்கம் ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கையும் இந்தத் டிரெய்லர் கோபமடையச் செய்துள்ளது. ரித்தேஷ் தேஷ்முக், மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் படத்தின் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் வந்துள்ள ரித்தேஷின் காட்சியையோ, புகைப்படத்தையோ எக்காரணம் கொண்டும் புரமோஷன்களில் பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் படக்குழு டிரெய்லரில் ரித்தேஷின் முகத்தை ஒரு காட்சியில் காட்டியுள்ளனர்.

போடப்பட்ட ஒப்பந்தத்தை நீங்கள் மறந்து எனக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டீர்கள் என ரித்தேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபத்துடன் கேள்விகள் கேட்டுள்ளார்.

ஒரு நடிகரான இவரே இப்படி கிளாமர் படம், சாதாரண படம் என பிரித்துப் பார்ப்பது என்ன நியாயம் என்கிறது படக்குழு. பிறகு சென்சாரைக் குறை கூறுவதில் என்ன பயன் என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.


Post your comment

Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions