பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’

Bookmark and Share

பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’

பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

இதில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பெயரை பார்த்ததும் விண்ணப்பித்த மற்ற அனைவரும் திகைத்தனர். அது சன்னிலியோன் என்றும் அவரது தந்தை பெயர் லியோனா லியோன் என்றும் இருந்தது.

பிரபல இந்தி நடிகை சன்னிலியோன். அவர் கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி படத்தில் அறிமுகமாகி நடித்துவருகிறார். சிலர் இதுபற்றி துறை மந்திரி வினோத் நாராயண் ஜா கவனத்துக்கு கொண்டுசென்றனர். அவர், இது இறுதி பட்டியல் அல்ல, அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

துறை செயலாளர் கூறும்போது, “சன்னிலியோன் யார் என்றே எனக்கு தெரியாது. அதை யாராவது குறும்புத்தனமாக வெளியிட்டிருக்கலாம். விரைவில் இதை சரிசெய்வோம்” என்றார். அதேபோல அந்த பட்டியலில் 2-வது இடம் பிடித்த சக்கரவர்த்தி என்பவரின் தந்தை பெயர் ஓம்புரி என்று இருந்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions