ஆபாச பட நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள்: சன்னிலியோன் பேட்டி

Bookmark and Share

ஆபாச பட நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள்: சன்னிலியோன் பேட்டி

‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சன்னிலியோன். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சன்னிலியோன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஆபாச படங்களில் நடித்து வந்தார். இதனால் அவர் படங்களில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆடைகளை குறைத்து ஆபாசமாக நடிப்பதாக அவர் மீது போலீசில் புகார்களும் குவிந்தன.

முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்வதை தவிர்த்து வந்தார்கள். இந்த நிலையில் ஷாருக்கான் படத்தில் நடிக்க சன்னிலியோனுக்கு வாய்ப்பு வந்து உள்ளது.

இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஜீனத் அமன் நடித்து 1989-ல் வெளியான ‘குர்பானி’ படத்தில் இடம் பெற்ற ‘லைலா ஓ லைலா’ என்ற பாடலின் ரீமிக்ஸ் பாட்டுக்குத்தான் இதில் அவர் ஆடுகிறார்.

ஷாருக்கான் படத்தில் நடிப்பது பற்றி சன்னிலியோன் கூறியதாவது;-

‘‘நான் ஷாருக்கானின் தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாகவே இருந்தது. ஆனால் என்னை ஆபாச பட நடிகை என்று பலரும் ஒதுகுகிறார்கள். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர்களும் கண்டு கொள்ளவில்லை. இதற்காக நான் துவண்டு விடவில்லை.

தற்போது ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் அவருடன் நடனம் ஆட எனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

கனவு உலகில் மிதப்பது போல் உணர்கிறேன். என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொள்ளவும் செய்கிறேன். ஷாருக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடப்போகும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions