ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்

Bookmark and Share

ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி, தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் சன்னிலியோன் இந்தி பட உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் பாலிவுட்டில் நடித்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ‘ராகினி எம்.எம்.எஸ்.-2’ என்ற இந்தி படம் தற்போது ‘ராத்ரி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

இப்படத்தில் சன்னி லியோன் கவர்ச்சி விருந்து படைத்திருப்பதுடன் பயங்கரமான பேயாகவும் நடித்து மிரட்டியிருக்கிறார். ‘சாமுராய்’ புகழ் அனிதா, பர்வீன் தபாஸ், சந்தியா மிருதுல், கரண் தாலுஜா உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள். பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள். 

இந்த படத்தில் சன்னி லியோன் நடனமாடிய ‘பேபி டால்’ என்ற சூப்பர் ஹிட் பாடலை இதுவரை சுமார் 8 கோடி பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலை தற்போது தமிழ், தெலுங்கு டப்பிங்கில் ‘ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு’ என்று தொடங்கும் ஸ்டைலிஷ் பாடலாக ரம்யா நம்பீசன் கிக் ஏற்றும் குரலில் பாடியுள்ளார். 

கவர்ச்சி காட்சிகளிலும், திகில் காட்சிகளிலும் ரசிகர்களை மிரட்டப் போகும் சன்னி லியோனின் ‘ராத்ரி’ விரைவில் திரைக்கு வருகிறது. ஷோபா கபூர், ஏக்தா கபூர் ஆகியோர் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கடந்த 17 வருடங்களாக இயங்கி வரும் ஸ்ரீ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதன் மூலம் தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறது.


Post your comment





Related News
அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்!
ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன? வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்!
மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி!
சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை!
தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா?
மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்!
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions