சோளிங்கரில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களின் பிரம்மாண்ட விழா

Bookmark and Share

சோளிங்கரில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களின் பிரம்மாண்ட விழா

ரஜினி தற்போது ‘கபாலி’, ‘2.0’ ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில், தனது ரசிகர் மன்றம் மூலம் ‘மலரட்டும் மனிதநேயம்’ என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை செய்ய முடிவு செய்தார். 

அதன்படி, சென்னையை அடுத்துள்ள சோளிங்கரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் இன்று நடத்தப்படுகிறது.

இதற்காக பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரஜினி நடந்து வருவதுபோன்ற 100 அடி உயர கட்-அவுட்டும் அமைக்கப்பட்டுள்ளது. 

ரஜினி தற்போது படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இந்த விழாவில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், ரஜினியின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர், வழக்கறிஞர் வி.பாலு, தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குனர் லிங்குசாமி, நடிகர்கள் கருணாஸ், ராகவா லாரன்ஸ், கருணாகரன், ஜீவா, ஜோ மல்லூரி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.


Post your comment





Related News
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி - ஷாக்கிங் புகைப்படங்கள்.!
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions