ஹீரோவாக களம் இறங்குகிறார் சுரேஷ்கோபியின் மகன்..!

Bookmark and Share

ஹீரோவாக களம் இறங்குகிறார் சுரேஷ்கோபியின் மகன்..!

பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் மலையாள சினிமாவில் நடிகர்களோ, இயக்குனர்களோ யாரும் தங்களது வாரிசுகளை களம் இறக்கும் பழக்கத்தை பின்பற்றியதில்லை..

நடிகர் சுகுமாரனின் மகன் பிருத்விராஜ் கதாநாயகனாக அறிமுகம் ஆனபின் தான் அடுத்தடுத்த பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை அவர்கள் விருப்பப்படி சினிமாவில் நுழைய அனுமதித்தார்கள்.

பிருத்விராஜை தொடர்ந்து அவரது அண்ணன் இந்திரஜித், பாசிலின் மகன் பஹத் பாசில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் வரை பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி ஹீரோவாகவும் ஆகிவிட்டார்கள்.

இப்போது நடிகர் ஜெயராமின் மகன் கூட தமிழில் ஒரு பக்க கதை  என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.. அதேபோல சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்த மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியும் தற்போது தனது மகன் கோகுலை ஹீரோவாக களமிறக்குகிறார்.

இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் விபின் தாஸ் என்பவர் இயக்குகிறார். படத்தை நடிகர் விஜய பாபுவும் சான்ட்ரா தாமஸும் இணைந்து தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள் விபரங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இதில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மட்டும் தான் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் எதிர்காலத்தில் ஒரு இயக்குனராவதற்காக பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions