
மாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து சூர்யா, விக்ரம்குமார் இயக்கத்தில் 24 என்ற தலைப்பு வைக்கப்பட்ட படத்தில் கடந்த சில நாட்களாக நடித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. இதனிடையே 24 என்ற தலைப்பு சம்பந்தமாக ஹிந்தி நடிகரான அனில்கபூருக்கும், சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் நெட்வொர்க் தயாரித்து அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான '24' என்ற ஆக்ஷன் த்ரில்லர் தொலைக்காட்சித் தொடரின் டைட்டிலை சூர்யா வைத்திருப்பதற்கு அனில் கபூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம்.
அந்த தொலைக்காட்சித் தொடரை சுமார் 4 வருடங்களுக்கு ரீமேக் செய்வதற்காக அனில் கபூர் சுமார் 150 கோடி கொடுத்து உரிமை வாங்கி வைத்திருக்கிறாராம்.
சமீபத்தில் சூர்யா நடிப்பதாக வெளியிடப்பட்ட 24; படத்தின் தலைப்பும் சில டிசைன்களும் அந்தத் தொலைக்காட்சித் தொடரின் சாயலில் இருப்பதாக அனில்கபூர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே 150 கோடி ரூபாய் அளவிற்கு ஒரு டிவி தொடரின் உரிமைய சாதனை விலையில் வாங்கியிருக்கிறார்கள் என்றால் அது 24 தொடர்தான் என டிவி விட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அனில் கபூர், சூர்யாவிடம் இது குறித்து பேசினாராம்.
சூர்யாவும் தன்னுடைய கிரியேட்டிவ் டீம், சட்ட ஆலோசகர்கள் ஆகியோருடன் கலந்து பேசி விரைவில் முடிவை தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சனையை சுமூகமாகவே தீர்க்க ஆசைப்படுவார் என்றும் அதனால் படத்தின் டைட்டிலான 24 ஐ மாற்றுவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post your comment