24 படத்திற்க்காக விக்ரம் குமார் என்னிடம் 4 மணி நேரம் கதை சொன்னார் : சூர்யா பேட்டி

Bookmark and Share

24 படத்திற்க்காக விக்ரம் குமார் என்னிடம் 4 மணி நேரம் கதை சொன்னார் : சூர்யா பேட்டி

‘24’ ஆடியோ விழாவில் சூர்யா பேசும்போது, இந்த படத்திற்காக விக்ரம் குமார் என்னிடம் 4 மணி நேரம் கதை சொன்னார். நான் எந்தவொரு கதை கேட்டும் எழுந்து நின்று கைதட்டியது இல்லை.

ஆனால், விக்ரம் குமாரிடம் கதையை கேட்டதும் எழுந்து நின்று கைதட்டினேன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பினேன். அவர் எங்களுக்காக அரை மணி நேரம் ஒதுக்கி, நேரில் வந்து கதை சொல்லச் சொன்னார்.

என்னிடம் 4 மணி நேரம் சொன்ன கதையை ஏ.ஆர்.ரகுமானிடம் எப்படி அரை மணி நேரத்திற்குள் சொல்லி முடிக்க போகிறார் விக்ரம் குமார் என்ற சந்தேகம் வந்தது. ஆனால், ஏ.ஆர்.ரகுமான் இந்த கதையை பொறுமையாக 6 மணி நேரம் கேட்டு முடித்தார். முடிவில் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார்.

அவருக்கு நான் கண்டிப்பாக ஒரு கதை சொல்லியே ஆகவேண்டும். ஒரு குழந்தை ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த சாக்லெட் பாட்டில்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தது. பின்னாலேயே வந்த அவளது அம்மா, உனக்கு வேண்டிய சாக்லெட்டை எடுத்துக் கொள் என்று அந்த குழந்தையிடம் சொன்னார். 

ஆனால், அந்த குழந்தையோ எந்த சாக்லெட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சாக்லெட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தது. கடைக்காரரும் ஆச்சர்யத்துடன், என்னம்மா ஒரு குழந்தை சாக்லெட் கடைக்குள் நுழைந்துவிட்டு சாக்லெட் வேண்டாம் என்று சொன்னால் எப்படி, என்று ஜாடி மூடியை திறந்து, சாக்லெட்டை எடுத்துக் கொள்ளச் சொல்லி சொன்னார். 

ஆனால், அந்த குழந்தை திரும்பவும் சாக்லேட் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு சாக்லெட்டையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அந்த கடைக்காரர் தனது கையில் ஒரு கொத்து சாக்லெட்டை எடுத்து அந்த குழந்தையின் கையில் திணித்தார். அந்த குழந்தையும் சிரித்த முகத்துடன் அதை பெற்றுக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தது. 

அப்போது, அந்த குழந்தையின் அம்மா, அவளைப் பார்த்து ஏன் சாக்லேட் வேண்டாம் என்று அடம்பிடித்தாய் என்று கேட்டதற்கு, அந்த குழந்தை என்னுடைய கை மிகவும் சிறிய கை, அந்த கையால் சாக்லெட்டுக்களை எடுத்தால் கொஞ்சம்தான் கிடைக்கும். ஆனால், அந்த கடைக்காரரின் கையோ மிகப்பெரிய கை, அவரது கையால் எடுத்து கொடுத்தால் நிறைய சாக்லெட்டுக்கள் கிடைக்கும் என்று சொன்னது. 

நாம் கடவுளிடம் எது கேட்டாலும் குறைவாகத்தான் கேட்போம். ஆனால், கடவுள் நமக்கு தரும்போது நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே தருவார். அதுபோலத்தான் ஏ.ஆர்.ரகுமானும். நாம் அவரிடம் எதையும் எதிர்பார்த்து கேட்க முடியாது. ஆனால், அவர் நாம் எதிர்பார்த்ததைவிட நிறையவே தருவார் என்று கூறினார். 


Post your comment





Related News
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல்!
காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!
தண்டல்காரன் பாட்டுக்கு பின்னாடி இப்படியொரு கதையா? என்னன்னு நீங்களே பாருங்க!
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions