நடிகர் சூர்யா ஹீரோ டாக்கீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்

Bookmark and Share

நடிகர் சூர்யா ஹீரோ டாக்கீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்

சென்னையில் இருந்து இயங்கும் ஹீரோ டாக்கீஸ் வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக, தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று  நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர்.

இந்நிறுவனம் நடிகர் சூரியாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம், மற்றும் இதர முதலீட்டாளர்கள் சஞ்சய் அர்ஜுன்தாஸ் வாத்வா  (முன்னணி திரைப்பட விநியோகஸ்தர்), வெளிநாட்டு வாழ் இந்தியர்களான பாலாஜி பஞ்சபகேசன் (UK), ஷங்கர் வெங்கடேசன் (Poland), மற்றும் வசிகரன் வெங்கடேசன் (USA) இருந்து தங்களின் முதல் சுற்று முதலீட்டை பெற்றுள்ளனர்.

2014ல் தொடங்கப்பட்ட 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம், 36 வயதினிலே, பசங்க 2 போன்ற தரமான படங்களை தயாரித்துள்ளது. மேலும் அடுத்து சூரியா நடித்து கொண்டிருக்கும் பிரமாண்ட படமான “24” படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ஒரு முன்னோக்குப் பார்வையோடு இயங்கும் நிறுவனமாக, நாங்கள் வெவ்வேறு முயற்சிகளுடன் இந்த பொழுதுபோக்கு துறையில் எங்களது வளர்ச்சியை மேம்படுத்த விளைகிறோம், அதன் வழியாகவே இந்த முயற்சியில் நாங்கள் முதலீடு செயுதுள்ளோம்”. என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜசேகர் பாண்டியன் கூறியுள்ளார்.

“நானும் என் சகோதரன் ஆதியும் மிகுந்த ஆவலுடன் எங்கள் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்பட காத்துக் கொண்டிருக்கிறோம். திரு சூரியா போன்ற முன்னணி நடிகர் இதில் விருப்பம் காட்டியது, எங்களை சிறந்த முறையில் ஊக்குவிப்பதாக இருக்கிறது” என இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதீப் அவர்கள் தெரிவித்தார்.

இந்த முதலீட்டில் பெரும் பங்கினை திரைப்படங்கள் மற்றும் வாடிக்கையாளர்  கையகப்படுத்தலில் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டு இருகின்றது. திரைபடங்கள் விநியோகம் செய்ய ஒரு தரமான மாற்று வழியினை கொண்டு வந்து. Piracy ஒழிக்கும் இந்நிறுவனத்தின் நோக்கத்தில், இது பெரும்வாரியாக உதவும்.

ஹீரோ டாக்கீஸ் பற்றி ஹீரோ டாக்கீஸ்.காம் (HeroTalkies.com) பிரதீப் மற்றும் ஆதித்தியன் அவர்களால் 2014ல் தொடங்கப்பட்டது. திரைப்படங்களை இணையம் வழியாக விநியோகம் செய்வதில் ஒரு சிறந்த மாற்று முறையினை கொண்டுவந்தது.

திரைப்பட தயாரிப்பளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தொடர்பினை கொண்டுவந்து, திருட்டு விசிடி மற்றும் இணையதளங்களால் வரும் பிரச்சனைகளை தீர்க்க விளைகிறது.

திரைக்கு வரும் திரைப்படங்களை இரண்டு அல்லது ஐந்து வாரங்களுக்குள் தங்களின் இணையத்தில், வெளிநாட்டு வாழ் மக்களுகாக வெளியிடுவது இவர்களின் முக்கிய அம்சமாகும். நிறுவனம் ஆரம்பித்த சிறிய காலத்திலே,  ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.


Post your comment

Related News
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
விஜயின் பெற்றோர்களுடன் மரண மாஸ் கெட்டப்பில் சூர்யா – புகைப்படத்துடன் இதோ!
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions