வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?

Bookmark and Share

வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா-  படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூர்யா 38. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும்  ஜி.வி.பிரகாஷ்  இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பகுதியில் கோபிநாத்தை போலவே நடிகர் சூர்யாவும் வழுக்கைத் தலையில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. அதிகமாக எந்த முன்னணி நடிகரும் எடுக்க துணியாத ஒரு ரிஸ்க்கை கதாபாத்திரத்தின் தன்மைக்காக சூர்யா எடுக்கிறார்.

ஏற்கனவே பேரழகன், கஜினி, ஏழாம் அறிவு, 24 போன்ற படங்களில் மாறுபட்ட வேடங்களில் தோன்றி இருந்த சூர்யா அதே பாணியை இப்படத்திலும் கடைபிடிக்க உள்ளார்.


Post your comment





Related News
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல்!
காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!
தண்டல்காரன் பாட்டுக்கு பின்னாடி இப்படியொரு கதையா? என்னன்னு நீங்களே பாருங்க!
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions