காக்க காக்க 2 குறித்து முதல்முறையாக மனம்திறந்த ஜோதிகா!

Bookmark and Share

காக்க காக்க 2 குறித்து முதல்முறையாக மனம்திறந்த ஜோதிகா!

சூர்யாவின் திரை பயணத்தில் அவருக்கு பக்க பலமாக இருந்த ஒரு நபர் அவருடைய காதல் மனைவி ஜோதிகா. முதல் வெற்றிக்காக சூர்யா போராடிக் கொண்டிருந்த காலத்தில் ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார்.

எனினும் அன்றுமுதல் சூர்யாவுக்கு உறுதுணையாக இருந்த ஜோதிகா, இன்று அவர் வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறார். மதம் கடந்து மொழி கடந்து பல ஆண்டுகள் காத்திருந்து கடந்த 2006ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா – ஜோதிகாவின் திருமணத்திற்கு இருந்த எதிர்பார்ப்புகளும் ஆரவாரங்களும் தற்போது வரை எந்த தமிழ் நடிகர்களுக்கும் கிடைத்தில்லை.

தற்போது ஜோதிகா மீண்டும் நடிக்கவந்திருப்பதால் சூர்யாவும் அவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. அதுவும் காக்க காக்க இரண்டாம் பாகம் எடுத்தால் நடிப்பீர்களா என ஜோதிகாவிடம் கேட்டதற்கு அதான் முதல் பாகத்தில் நான் இறந்துவிடுவேனே.. வந்தால் இரண்டாம் பாகத்தில் பேயாகத்தான் வரவேண்டும் என்று ஜாலியாக கூறினார்.


Post your comment





Related News
சூர்யா தயாரிக்கும் அடுத்த படம்.. நாயகி கூட ஜோதிகா தான் - முழு விவரம் இதோ.!
மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ!
என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
ஜோதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா
ஹீரோயினான சூர்யா – ஜோதிகாவின் மகள்!
சூர்யா, ஜோதிகா வாக்களித்தனர்
9 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா!
மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார்கள் முன்வரவேண்டும்: சூர்யா வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions