சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Bookmark and Share

சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா-ஹரி வெற்றிக்கூட்டணியில் சிங்கம் படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் வெற்றிபெற்ற நிலையில், தற்போது இந்த கூட்டணி சிங்கம் மூன்றாம் பாகத்தையும் எடுத்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டான செய்திகள் வெளிவந்திருக்கிறது.

அதாவது, தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் சூர்யா வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இங்கு ஏப்ரல் 27-ந் தேதி வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு, படப்பிடிப்புக்கு சிறிது ஓய்வு கொடுக்கப்பட்டு மே இறுதியில் மீண்டும் விசாகப்பட்டினத்தில் படமாக்கவுள்ளனர்.

இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஆந்திராவிலேயே படமாக்கப்பட்டு வருவதால், இப்படம் ஆந்திராவை கதைக்களமாக கொண்டு உருவாவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு பாகத்திலும் போலீஸ் அதிகாரியாக வேறு ஊருக்கு மாற்றலாகி வரும் சூர்யா, இந்த பாகத்தில் ஆந்திராவுக்கு மாற்றலாகி சென்று அங்குள்ள எதிரிகளை எப்படி துவம்சம் செய்கிறார் என்பதுதான் கதையாக உருவாகி வருகிறதாம்.

மே இறுதியில் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஜூலை இறுதியில் படக்குழுவினர் மலேசியா செல்லவிருக்கிறார்களாம். மலேசியா பயணம் இதற்கு முன்னதாகவே செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது மலேசியாவில் மழை பெய்து வருவதால் ஜுலை மாதத்திற்கு மலேசியா பயணத்தை தள்ளிப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் – மாஸ் கூட்டணி ரெடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions