என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை

Bookmark and Share

 என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை

என்.ஜி.கே படத்துக்காக திருப்பூரில் 215 அடிக்கு சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு கட் அவுட் வைத்தனர். உலகிலேயே ஒரு பிரபலத்துக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்-அவுட் இதுதான்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா  -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. முன்னதாக இப்படத்துக்காக திருப்பூரில் 215 அடிக்கு சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு கட் அவுட் வைத்தனர்.

உலகிலேயே ஒரு பிரபலத்துக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்-அவுட் இதுதான் இந்நிலையில் இந்த கட் அவுட் முறையாக முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி இந்த கட்ட அவுட்டை அரசு அதிகாரிகள் கலைத்துள்ளனர். என் ஜி கே ரிலீஸ் நேரத்தில் இது சூர்யா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 


Post your comment





Related News
என்.ஜி.கே தோல்வி குறித்து முதன் முறையாக மனம் திறந்த சூர்யா - வைரலாகும் பதிவு!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
ஒரு வார்த்தையில் விஜய்யை புகழ்ந்த சாய் பல்லவி - வைரலாகும் செய்தி!
சாய் பல்லவியை இப்படியெல்லாம் டார்ச்சர் செய்தாரா செல்வராகவன் - வெளிவந்த உண்மை!
அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!
இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? குவியும் நட்சத்திரங்கள்!
என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions