சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!

Bookmark and Share

சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!

இந்த படத்தை விட்டு விஜய் தேவரகொண்டா தற்போது முழுதாக விலகி விட்டாராம் அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை தற்போது படக்குழு தேடி வருகிறது.
அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது. இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இது ஒருபக்கமிருக்க அர்ஜுன் ரெட்டி வெளியான சமயத்திலேயே தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு விஜய் தேவரகொண்டாவிடம்  கால்ஷீட்டை வாங்கி ஒரு படத்தை ஒப்பந்தம் செய்தாராம்.

புதுமுக இயக்குனர் இயக்கத்தில் இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகளும் தீவிரமாக தொடங்கியது ஆனால் இடையில் என்ன நடந்ததோ சில கருத்து வேறுபாடுகள் இயக்குனருக்கும் நடிகருக்கும் ஏற்பட்டது.

பின்னர் தயாரிப்பு தரப்பில் கொஞ்சம் தாமதம் ஆனது இப்படியே தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் இந்த படத்தை விட்டு விஜய் தேவரகொண்டா தற்போது முழுதாக விலகி விட்டாராம் அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை தற்போது படக்குழு தேடி வருகிறது.

 


Post your comment





Related News
என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டார் படத்தால் கடும் சிக்கலில் விஜய் தேவரகொண்டா – ஏன்னு அவரே சொன்ன பதில பாருங்க!
விஜய் தேவரகொண்டாவுடன் ஜாலியாக பார்டி செய்யும் ராஷ்மிகா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions